அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்

அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்.

(இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழு_தமிழீழவிடுதலைப்புலிகள் சார்பான பிரதிநிதி மன்னார் மாவட்டம்)

 

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மரியநாயகம் மாஸ்டர் அவர்களின் இழப்புச்செய்தியறிந்து ஆழ்ந்த துயரத்தில் வேதனையடைகின்றோம்.மக்கள் கல்விச்சமூகம் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் உயரிய போராளிகள் பொறுப்பாளர்கள் தளபதிகள் என இவரது தேசப்பற்றுக்கென்று தனித்துவமான மரியாதைக்குரியவராக திகழ்ந்தவர்.

 

இவர் ஆங்கில ஆசிரியராக பள்ளிமுதல்வராக ஆங்கில கல்விக்கான உதவிக்கல்விப்பணிப்பாளராக தனது பணியின் ஊடாக அரச உயர்பதவிகளைப்பெற்று ஓய்வு நிலைபெற்ற சமகாலத்தில் தாயக விடுதலைப்போராட்ட எழுச்சிமிகுகாலத்தை உருவாக்க போராளிகளுடன் இணைந்து பக்கபலமாக உழைத்த உண்மைத்துவமான மனிதர்.

 

தமிழர் புனவாழ்வுக்கழகம் மன்னார் மாவட்ட தலைவராக இருந்து மக்களுக்கான உடனடிமனிதாபிமான பணிகள்,இடைக்கால பணிகள்,நீண்டகாலபணிகள் என முகாமைத்துவ குழு ஊடாக திட்டமிட்டு மக்களது துன்பியல் இடம்பெயர்வு மீள்குடியேற்ற வாழ்வியலை இனங்கண்டு பணியாற்றயவர்.

 

மன்னார்மாவட்டத்தில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களை உள்ளடக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தலைவராக  பணியாற்றியவர்.

 

தாயக விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக சமாதான பேச்சுவார்த்தைக்காலபகுதியில் சரவதேச மத்தியஸ்தத்ததுடன் உருவாக்கப்பட்ட இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் விடுதலைப்புலிகள் அமைப்பின் மன்னார்மாவட்டம் சார்பான பிரதிநிதியாக அருட்திரு.சேவியர்குரூஸ் அடிகள், திரு.ப.மரியநாயகம் குரூஸ் இருவரையும் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்துறை நடுவப்பணியத்தால் நியமிக்கப்பட்டவர்களாவர். இவரது கண்ணியமான பணியின் மூலம் அவ்வப்போது இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழுவின் நிலவரம் இலங்கை அரசபடைகளின் போர்நிறுத்தமீறல்கள் விடுதலைப்புலிகளின் எதிர்பார்ப்பு க்களை உடனுக்குடன் தெரியப்படுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் நியாயத்தன்மையினை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிற்கு தெரியப்படுத்தி விடுதலைப்போராட்டத்தை  சரவதேச மத்தியஸ்துவம் வகித்தவர்களுக்கு அறியப்டுத்திய தேசப்பற்றாளன்.

 

தொடர்ந்து வந்த காலம்  சிறிலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தமிழர்தாயக பிரதேசம் எங்கும் போர் தொடுத்த காலம் மன்னார் தொடங்கி முள்ளிவாய்க்கால்  வரை மக்கள் எதிர்நோக்கிய அத்தனை இடம்பெயர்வுகளிலும் தானும் ஒருவனாக துயரினைச்சுமந்து அவ்வப்போது மக்களுக்கு தேவையான பணிகளை தமிழர்புனர்வாழ்வுக்கழகத்தின் பணிப்பாளர்களுடன் இணைந்து செயற்படுத்தியவர்.

 

போரின் உச்சக்கட்டம் வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பாரிய இடம்பெயர்வில் மக்கள் சொல்லொணா துயரத்துள்சிறிலங்கா அரசு நடாத்திய ஆகாய கடல் தரைவழிமூலமான மும்முனைத்தாக்குதலில்  கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட வேளையில் தனது அன்புக்குரிய வாழ்க்கைத்துணைவி ரமணி அன்ரியை இழந்தார் அவரது ஆறாத்துயருடன் தாயக விடுதலைப்போராட்டமும் ஓரிரு வாரங்களில் மௌனிக்கப்பட்டது.வேதனையின் விழிம்பிலும் அழிவில் இருந்து துவண்டு மீண்டும் தன்னைத்தானே சுதாகரித்துக்கொண்டு தனது இறுதிக்காலம் வரை மக்களுக்கும் மண்ணுக்கும் விசுவாசமாக தன்னால் இயன்ற பணியை பற்றுதியுடன் தனது சொந்த இடமான பறப்பான்கண்டலில் இருந்து செய்து வந்தவர்.

 

வாழும்வரை தனக்கென்று எந்த வித சுயநல எதிர்பார்ப்பின்றி தன்னலம் கருதாது  பொதுநல சிந்தனையுடன்  வாழ்ந்த  தேசப்பற்றுமிக்க மரியநாயகம் மாஸ்டர்  மக்கள் மனங்களில் நிறைந்தவராக என்றும் இருப்பார்.இவருக்கான இறுதிவணக்கத்தையும் இறுதி அஞ்சலியையும் இதயபூர்வமாக இணையவழியில் பகிர்வதில் ஆத்மதிருப்தியடைகிறேன்.

இனியவன்.

10.04.2020.

யாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் இன்று ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவரகள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர், மாவீரர்களை நினைவுகூர்ந்து மெழுகுதிரிகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

தாயக விடுதலைப்போரில் ஆகுதியாகிய மாவீரர்களை வழமையாக நவம்பர் மாதம் 27 ஆம் தேதியே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அனுட்டித்து வந்துள்ளது.


இந்த மாவீரர் தினத்தை அனுட்டிப்பது சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்து, முந்தைய அரசாங்கம் அதற்குத் தடைவிதித்திருந்தது.


இந்த நிலையில் நேற்றிரவு யாழ் பல்கலைக்கழகத்தின் பல இடங்களிலும் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு அமைதியான முறையில் நடந்தேறியிருக்கின்றது.


நடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை

யுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாட முடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் செயற்றிட்டம் ஒன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்றிட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றோம். நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது. இதனடிப்படையில் எமது மாகாணத்தின் தேவை கருதி இவ்வாறான பிரத்தியேக திட்டங்களை ஆரம்பிக்வேண்டிய தேவை எழுந்துள்ளது.

எமது மாகாணத்தில் இந்த கொடிய யுத்தத்தின் காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டு சுயமாக இயங்கமுடியாமல் வீடுகளில் உள்ளனர். இவர்களை கவனிக்க தற்போதுள்ள சுகாதார சேவையில் வசதிகள் இல்லை. எனவேதான் இவ்வாறானவர்களை கவனிக்க 2014ம் ஆண்டு வவுனியாவில் வைகறை எனும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பித்தோம்.

எனினும் அந்த புனர்வாழ்வு நிலையத்தில் போதிய இடவசதிகள் இல்லாத நிலையில் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறாக சுயமாக இயங்கமுடியாது படுக்கையில் இருக்கும் நோயளிகள் பலவேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களில் பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களின் நலன் கருதியே இந்த செய்ற்றிட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.

குறித்த திட்டம் மாகாண நிதியிலோ அல்லது மத்திய அரசின் நிதியிலோ ஆரம்பிக்கவில்லை. அண்மையில் நான் கனடாவுக்கு விஜயம் செய்தபோது புலம்பெயர் உறவுகளை சந்தித்தபோது நாங்கள் எதிர்நோக்கம் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். புலம்பெயர் கொடையாளர்களின் உதவியுடன் உள்ளுரில் உள்ள தொண்டு நிறுவனங்களினூடாகவே இந்த செய்ற்திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.

எதிர்காலத்தில் இந்தச் செயற்றிட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடமாடும் குழு சேவையில் ஈடுபடும். அதில் மருத்துவ தாதி, உளநல ஆலோசகர் மற்றும் உதவியாளர் ஒருவர் என இடம்பெறுவர். இவர்கள் நோயளிகளின் வீடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு சிகிச்சைகளை வழங்குவர் என்று தெரிவித்தார்.

போராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம்

இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் குடும்பத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரி யான லெப்டினன்ட் விமல் விக்ரம இன்று 20 இலட்சம் ரூபா நட்டஈட்டை செலுத்தி யுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இந்த நட்டஈட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையிலேயே முன்னாள் இராணுவ அதிகாரி செலுத்தி யிருக்கின்றார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள இராணுவ முகாமில் கைதுசெய்யப்பட்டிருந்த ரொபட் வோலிண்டன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியை 1998-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியான விமல் விக்கிரமகே, முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விமல் விக்கிரமகே என்ற முன்னாள் இராணுவ அதிகாரிக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி, இறந்த போராளியின் உறவினர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடை பெற்றுக் கொடுக்குமாறும் உத்தரவிட்டி ருந்தார்.

இதற்கமையவே இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில், முன்னாள் படை அதிகாரி 20 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்கினார்.

படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி மறுமணம் செய்திருப்பதால் அவருக்கு பத்து லட்சம் ரூபாவும், முன்னாள் போராளியின் தந்தைக்கு பத்து இலட்சம் ரூபாவும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டீற்கான நிதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினரே திரட்டிக்கொடுத்துள்ளனர்.

எனினும் முன்னாள் படை அதிகாரிக்கான இந்த நிதி திரட்டல் நடவடிக்கையிலும் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பு என்ற பெயரில் முன்னாள் படைவீரர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் அமைப்பின் தலைவரான முன்னாள் மேஜர் தர அதிகாரியான சட்டத்தரணி அஜித் பிரசன்ன குற்றம்சாட்டியுள்ளார்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…